திருமாவளவன் போராட்டத்தில் கல்வீச்சு- கம்யூ. தொண்டர் தாக்கப்பட்டார்
சென்னை: விலைவாசி உயர்வைக் கண்டித்து சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது கல் வீசிய கம்யூனிஸ்ட் தொண்டர் தாக்கப்பட்டார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தை சார்பில் மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின் போது கூட்டத்தில் இருந்த கம்யூனிஸ்ட் தொண்டர் ஒருவர் ஆட்டோ மீது கற்களை வீசினார். உடனே போலீசார் அவரை பிடித்தனர். ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் அவரை தாக்கினார்கள். அவர்களிடம் இருந்து போலீசார் காப்பாற்றும் முயற்சியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. சில போலீஸ்காரர்களும் கீழே விழுந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது. உடனே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலத்தப்பட்டது.
முன்னதாக போராட்டத்தின்போது திருமாவளவன் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டன. அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பு எற்படாத வகையில் முடிவு எடுப்பது தான் நல்ல அரசு. சாதாரண மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் திரும்ப பெற்றால் தான் மத்திய அரசை மக்கள் பாராட்டுவார்கள்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி காங்கிரஸ் கொண்டு வந்துள்ள டீசல் விலை உயர்வை வர வேற்க முடியாது. அதை கண்டிக்கிறோம். பிரதமர் மன்மோகன்சிங் டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிடுகின்றன. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன். கருத்துக்களை வரவேற்கிறேன்.
பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்காக உழைக்க பிரசாரம் செய்கிறேன். இன்று இரவு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். ஏப்ரல் 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் சென்னையில் மாநாடு நடத்தப்படுகிறது.
மாநாட்டில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு புரட்சியாளர் அம்பேத்கார் விருது வழங்க இருக்கிறோம் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications