நேரு கொண்டுவந்த நதி நீர் வாரிய சட்டத்தை அமல்படுத்துங்கள்: பழ.நெடுமாறன்
மதுரை: கடந்த 1956ம் ஆண்டில் நேரு பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட நதி நீர் வாரிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறம் வலியுற்றுத்தி உள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழு கூட்டம் மதுரை கே.கே.நகரில் உள்ள கிருஷ்ண அய்யர் அரங்கில் பழ.நெடுமாறன் தலைமையில் நேற்று நடந்தது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 5 மாவட்ட பாசன சங்கத்தின் தலைவர் அப்பாஸ் உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்கள்.
கூட்டத்தின் முடிவில் பழ.நெடுமாறன் அளித்த பேட்டி: முல்லைப் பெரியாறு, செண்பக ஆறு, நெய்யாறு, பாம்பாறு என பல்வேறு வகையில் தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தை நாசமாக்கி வருகிறது கேரள அரசு.
இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படும் கேரள அரசை மத்திய அரசு கண்டிக்கவில்லை. உச்சநீதிமன்ற வழக்கிலும் நமக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே தமிழக விவசாயிகள் ஒன்றுபட்டு போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
கேரளாவின் இந்த பிடிவாதத்தால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, வருகிற மே மாதம் 28ம் தேதி கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கேரளாவிற்கு செல்லும் 13 ரோடுகளில் மறியல் பேராட்டம் நடைபெறும்.
இந்த போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், சங்கங்கள், தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும்.
அரசியல் சார்பற்ற இந்த பேராட்டத்தில் அனைவரும் பங்கு பெற வேண்டும். காவிரி பிரச்சினையில் அனைவரும் ஒன்று பட்டு இருப்பது போல, முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நாம் அனைவரும் ஒன்று பட்டு இருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் நமது தரப்பு நியாயத்தை தெளிவுபடுத்த தமிழக அரசு தவறி விட்டது. அதனை மறைக்க பல்வேறு காரணங்கள் சொல்கிறார்கள்.
1956ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது நதி நீர் வாரிய சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சட்டம் இது வரை அமல்படுத்தபடாத நிலையில் இருக்கிறது.
அந்த சட்டத்தை அமுல்படுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் பதவி விலக வேண்டும்" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications