பண மோசடி- மகனை கடத்தி விட்டதாக நித்தியானந்தா மீது புதிய புகார்கள்

சேலத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
என்னுடைய ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலப்பிரச்சனை கோர்ட்டில் உள்ளது உள்ளது. அப்போது என்னிடம் நித்தியானந்தா சாமியாரிடம் சென்றால் பிரச்சனை குறையும் என்று சிலர் சொன்னார்கள். பிரச்சனை குறையும் என்று நான் நித்தியானந்தா ஆசிரமத்தை தொடர்பு கொண்டேன். எந்த பிரச்சனையானாலும் விண்ணப்பத்தில் எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள்.
பின்னர் சேலம் ஆசிரமத்தை தொடர்பு கொள்ளுமாறு எனக்கு முகவரியும், போன் நம்பரும் கொடுத்தார்கள். அங்கு நான் சென்றுபோது நித்தியானந்தா சீடர்கள், சாமியார் உங்கள் பிரச்சனையை குறைக்க சிறப்பு பூஜை நடத்துவதாக கூறியிருக்கிறார். அதனால் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமாக சாமியார் கையில் கொடுங்கள். உங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்து வெற்றி கிடைக்கும் என்றனர்.
நானும் அதை நம்பி சாமியாரிடம் பணம் கொடுத்தேன். கேஸ் தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்று கேட்டேன். கேஸ் தோல்வி அடைந்தால் பணத்தைத் திரும்பி பெற்றுக் கொள்ளுங்கள் என்று சாமியாரின் சீடர்கள் சொன்னார்கள்.
இப்போது என்னுடைய கேஸ் கோர்ட்டில் தோற்றுவிட்டது. நான் சாமியாரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். அது முடியவில்லை. யாரும் சரியான பதில் சொல்ல மறுக்கிறார்கள் என்றார்.
மகன் கடத்தல்- தமிழாசிரியரின் குமுறல்:
இதற்கிடையே, நித்யானந்தாவிடம் கல்வி கற்க சென்ற தனது மகன் திரும்பி வரவில்லை என்றும், மகனோடு தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என்றும் திருச்சி அருகே உள்ள நவலூர் புட்டப்பட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இடும்பன் கூறியுள்ளார்.
இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
திருச்சியில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் இருக்கும் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். ஓய்வு பெற்ற தமிழாசிரியரான எனக்கு 4 பெண்கள், ஒரு மகன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இதே ஊரைச் சேர்ந்த சித்த மருத்துவர் கோவிந்தராஜன் என்பவர் மூலம் நித்தியானந்தா சாமியாரிடம் அறிமுகமானேன்.
சிகிச்சை பலன் அளித்ததால், நானும் எனது குடும்பத்தார் அனைவரும், நித்தியானந்தா முகாம்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தோம். 10ஆம் வகுப்பில் 440 மார்க் எடுத்து, கேட்டரிங் முடித்து விடுமுறையில் இருந்த எனது மகன் சுரேந்தரை, பெங்களூரில் உள்ள நித்தியானந்தா சாமியாருக்கு சொந்தமான இலவச கல்வி நிலையத்திற்கு அனுப்பினேன்.
பெங்களுரில் படிக்கும் பையனையும், சாமியாரையும் மாதம் ஒருமுறை நான் சந்தித்து வந்தேன். அப்போது நவலூர் புட்டப்பட்டு கிராமத்தில் ஆசிரமம் ஆரம்பித்தால், உங்களைப் போல் நிறைய பேர் பயன்பெறுவார்கள் என்று சாமியார் கூறினார்.
சாமியார் பேச்சைக் கேட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள இடத்தை ரூ.4 லட்சத்துக்கு எனது மருமகனிடம் இருந்து வாங்கினேன். இதற்கு சாமியாரின் பக்தர் அமெரிக்காவைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் பணம் கொடுத்தார். அந்த ஆசிரமத்துக்கு என்னை செயலாளராக நியமித்தார் நித்தியானந்தா. நித்தியானந்தா மீது நம்பிக்கை வைத்து எனது சொந்த பணத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து பாதி ஆசிரமம் கட்டி விட்டேன்.
ஆசிரமம் ஆரம்பித்த சிறிது நாட்களில், அப்பகுதியில் முகாம்கள் அமைக்க பணம் வசூல் செய்யுமாறும், ஆசிரமத்தில் செயலாளராக உள்ளவர்கள் கண்டிப்பாக பணம் வசூலீக்க வேண்டும் என்றும் சாமியார் கட்டளையிட்டார். மேலும் தன்னை சந்திக்க பக்தர்கள் விருப்பப்பட்டால், அவர்களிடமும் பணம் வசூலிக்க சொன்னார்.
அப்போதுதான் எனக்கு இவர்கள் ஆசிரமம் நடத்தவில்லை. பிசினஸ் செய்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்தது. இந்த விஷயத்தை என் மகனிடம் சொல்ல முயற்ச்சித்தேன். அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
திருச்சியில் கடந்த 2009ஆம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி சாமியார் முகாமிட்டு, ஆசிரம செயலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், பணம் வசூல் செய்யுமாறு நன்கொடை ரசீது கொடுத்தார். நான் அதை வாங்க மறுத்தேன். அப்போது அத்தனை பேரின் மத்தியில் என்னை வெளியே போ என்று சாமியார் கத்தினார்.
கூட்டத்தை விட்டு வெளியே வந்த நான் எனது மகன் சுரேந்தரை தொடர்பு கொண்டேன். ஆனால் பேச முடியவில்லை. தொடர்ந்து போன் செய்த பின் ஒருநாள் சுரேந்தர் பேசினான். அப்போது சாமியாருடைய நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான். நீ அங்கே இருக்காதே, வந்துவிடு என்று சொன்னேன்.
ஆனால் சுரேந்தர், நான் சாமியாரிடம்தான் இருப்பேன் என்றும், என்னை பார்க்க வராதீர்கள் என்றான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் பெங்களூருக்கு நேரில் சென்று எனது மகனை பார்க்க முயற்சித்தேன். ஆனால் அங்கிருப்பவர்கள் சுரேந்தரை பார்க்க அனுமதிக்கவில்லை.
இந்த சுரேந்தர் தற்போது நித்ய பிரபானந்தா என்ற பெயருடன் இருக்கிறாராம். மேலும் நித்தியானந்தாவைப் போல முடியையும் நீளமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
எனது மகனை சாமியார் நித்தியானந்தாவிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார் இடும்பன்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications