தூத்துக்குடி: மலேசியாவுக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள், பவளப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் தூத்துக்குடி சோட்டையன்தோப்பு பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட அரியவகை கடல் அட்டைகள், பவளப்பாறைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதில் பதப்படுத்தப்பட்ட ஆயிரத்து 50 கடல் அட்டைகளையும், 100 கிலோ பவளப்பாறைகளையும் அவர்கள் கைப்பற்றினர்.
விசாரணையில் இவை தூத்துக்குடியில் இருந்து கொச்சி வழியாக மலேசியாவுக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதில் தொடர்புடைய வீட்டு உரிமையாளர் ராமலிங்கம், திரேஸ்புரத்தை சேர்ந்த அண்டோ, ஷேக் மைதீன், அண்ணா காலனி ஜாபர், மற்றும் ஆர்வி புரம் சம்சுதீன், ஆகியோர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய திரேஸ்புரத்தை சேர்ந்த அப்துல்காதர், பீர் ஆகியோரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை, பவளப்பாறைகளின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications