தேங்காய் விளைச்சல்: சரியும் கேரளா-உயரும் தமிழகம், கர்நாடகா
திருவனந்தபுரம்: தேங்காய் விளைச்சலில் முன்னணியில் உள்ள கேரளாவுக்கு அந்த பெருமை மெல்ல மெல்ல பறி போக ஆரம்பித்துள்ளது. மாறாக அண்டை மாநிலங்களான தமிழ்நாடும், கர்நாடகமும் தேங்காய் உற்பத்தியில் முன்னேற ஆரம்பித்துள்ளனவாம்.
'கேரா' என்பதற்கு தேங்காய் என்று பொருள். இதன் அடிப்படையில்தான் கேரளா என்ற பெயரும் வந்தது. அந்த அளவுக்கு கேரளா தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலமாகும்.
ஆனால் இது இப்போது பழம் கதையாகும் அபாயம் எழுந்துள்ளது. காரணம், தேங்காய் விளைச்சல் கேரளாவில் கணிசமான அளவுக்கு வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கியுள்ளதாம்.
நாட்டின் ஒட்டுமொத்த தேங்காய் உற்பத்தியில் கேரளாவின் பங்கு மட்டும் 57 சதவீதமாக கடந்த 90களில் இருந்தது. ஆனால் கடந்த 2008ம் ஆண்டு இது 43 சதவீதமாக குறைந்து விட்டது.
அதேசமயம், தமிழகமும், கர்நாடகமும் சேர்ந்து ஆண்டுக்கு 41.43 சதவீத தேங்காய்களை உற்பத்தி செய்கின்றன. கேரள மாநில திட்டக் குழுவின் பொருளாதார ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1.90 மில்லியின் ஹெக்டேர் பரப்பளவுக்கு தேங்காய் விளைவிக்கப்படுகிறது. இதில் கேரளாவின் பங்கு மட்டும் 7.81 லட்சம் ஹெக்டேர்களாகும். மாநிலத்தின் மொத்தப் பயிர்களில் தேங்காயின் பங்கு மட்டும் 38 சதவீதமாகும்.
தேங்காய் விளைச்சலில் வலுவான இடத்தில் இருந்து வரும் கேரளாவுக்கு அதில் சரிவு காணப்பட்டாலும் கூட கடந்த நிதியாண்டில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தமிழ்நாடும், கர்நாடகமும், தேங்காய் உற்பத்தியில் படிப்படியாக முன்னேறி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications