பென்னாகரம் இடைத் தேர்தலை நடத்தப் போகும் 3 பெண் அதிகாரிகள்
தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தலை நடத்தும் பொறுப்பு மூன்று பெண் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 3ம் தேதி தொடங்கியது.
இடைத் தேர்தலை மூன்று பெண் அதிகாரிகள் நடத்தவிருக்கின்றனர். தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதா, பென்னாகரம் தொகுதி தேர்தல் அதிகாரியும், ஆர்டிஓவுமான மகேஷ்வரி ரவிக்குமார், டி.எஸ்.பி. பஞ்சவர்ண் ஆகியோரே அவர்கள்.
3 அதிகாரிகளும் இணைந்து அனைத்துத் துறையினரின் ஒத்துழைப்புடன் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடியத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 பார்வையாளர்கள் நியமனம்...
இதற்கிடையே, இடைத்தேர்தல் பணிகளை கண்காணிக்க 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
அவர்களில் ஒருவர் சஞ்சய்போஸ் ரெட்டி. இவர் லக்னோவில் உத்தரபிரதேச அரசின் வருவாய் வாரிய நீதியியல் உறுப்பினராக உள்ளார்.
மற்றொரு தேர்தல் பார்வையாளராக டி.பி.அகூஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போபாலில் மத்திய பிரதேச அரசின் வறட்சிக்கு இலக்காகும் பகுதி திட்டத்தில், திட்ட இயக்குனராக உள்ளார்.
இரு அதிகாரிகளும் 30ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பணியில் இருப்பார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications