கூடன்குளம் அணுமின் நிலையம்- ரூ.66 லட்சம் மின் கம்பிகள் திருட்டு
நெல்லை: கூடன்குளம் அணுமின் நிலையத்துக்கு சொந்தமான ரூ.66 லட்சம் மதிப்பிலான அலுமினிய மின் கம்பிகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர்.
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகத்துக்காக ராட்சத டவர்கள் அமைக்கப்பட்டு உயர் மின்அழுத்த கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கம்பிகளில் தற்போது மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் காட்டுப்பகுதி வழியாக செல்லும் இந்த அலுமினிய மின் கம்பிகளை மர்ம நபர்கள் சுலபமாக வெட்டி எடுத்து சென்று விடுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆலங்குளம் அருகே உள்ள உகந்தன்பட்டியில் இருந்து 3 கி.மீ தொலைவில் 5 முனை மின்கம்பிகளை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்று விட்டனர்.
1,680 மீட்டர் நீளமுள்ள இந்த மின்கம்பிகளின் மதிப்பு ரூ.7.5 லட்சம். இதே போல் பத்தமடை அருகே உப்பூரணியில் இருந்து 3.5 கி.மீ தொலைவில் ரூ.8.42 லட்சம் மதிப்புள்ள 3,049 மீட்டர் மின் கம்பிகளையும், சுத்தமல்லி பகுதியில் இருந்து மீனவன்குளம் வரை 19 டன் எடையுள்ள ரூ.50 லட்சம் மதிப்புள்ள மின்வயர்களையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து அபிஷேகப்பட்டி பொறுப்பாளர்கள் பாண்டியராஜா, சிவதாஸ் ஆகியோர் ஆலங்குளம், சுத்தமல்லி, பத்தமடை காவல் நிலையங்களில் புகார் செய்துள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications