சிங்கப்பூர் தொழிலதிபர் திருச்சியில் விமான நிலையத்தில் மரணம்
திருச்சி: சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் மாரடைப்பால் இறந்தார்.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் முகமது ஹனீபா (74). இவரது பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த செட்டிமேடு பகுதி ஆகும். ஆனால், ஹனீபா சிங்கப்பூர் நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்.
இளம் வயதிலேயே சிங்கப்பூர் சென்ற ஹனீபா அங்கு கண்ணாடிக்கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், திருத்துறைப்பூண்டியில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க, ஏர் - இந்தியா விமானம் மூலம் ஹனீபா நேற்று திருச்சி வந்தார்.
அப்போது, இமிகிரேஷன் சோதனை முடிந்த நிலையில், சோர்வாக காணப்பட்ட ஹனீபா சேரில் அமர்ந்திருந்தார். திடீரென அப்படியே மயங்கி விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவர் வழியிலேயே மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்












Click it and Unblock the Notifications