சோமாலியா கடல் கொள்ளையர் 35 பேர் கைது-பிரான்ஸ் கடற் படை அதிரடி
பாரிஸ்: சோமாலியா கடல் பகுதியில் நடந்த 48 மணி நேர அதிரடி தேடுதல் வேட்டையில் கடல் கொள்ளையர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டதாக பிரெஞ்சு ராணுவ அமைச்சகம் அறிவித்தது.
சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடந்த பல காலமாக உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகின்றனர்.
சர்வதேச கடல்சார் நிறுவனம், சர்வதேச உணவு திட்ட நிறுவனம் போன்றவை கடல் கொள்ளையரால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அடிக்கடி கவலை தெரிவித்து வந்தன.
சோமாலிய கடல் வழியே வரும் சரக்கு கப்பல்களை கடத்திச் செல்லும் இந்த கொள்ளையர்கள், கணிசமான பணத்தை கேட்டு பேரம் பேசுவதுண்டு.
பேரம் படியாமல் போகும் போது கப்பலை நாசப்படுத்தியும், கப்பலில் உள்ளவர்களை கொன்றும் சூறையாடி வந்தனர்.
இவர்களை ஒடுக்க ஐரோப்பிய யூனியன் கடந்த 2008ம் ஆண்டு அட்லாண்டா மிஷன் என்ற அமைப்பை உருவாக்கியது.
கடல் பகுதியில் தொடர் ரோந்து பணியில் இப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படை அமைப்பும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பிரான்ஸ் கப்பற்படையினர் சோமாலியா கொள்ளையர்களை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தினார்கள்.
அப்போது கப்பலை கடத்த முயன்ற 35 பேர் கைது செய்யப்பட்டதாக பிரெஞ்ச் ராணுவ அமைச்சக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொள்ளையர்களுக்கு சொந்தமான 4 பெரிய கப்பல்கள் மற்றும் ஏராளமான படகுகளையும் ஆயுதங்களையும் பிரெஞ்ச் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களால் கடத்தப்பட்ட 4 பெரிய கப்பல்கள், 6 சிறிய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவலை பிரான்சு கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications