மகளிர் மசோதாவால் அமளி - ராஜ்யசபா, லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இன்று காலை ராஜ்யசபா கூடியதும் கேள்விநேரத்தைத் தொடங்க அவைத் தலைவர் உத்தரவிட்டார்.
ஆனால் சமாஜ்வாடி கட்சியினர் எழுந்து முதலில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று கோரி கோஷமிடத் தொடங்கினர். மேலும் மகளிர் மசோதாவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதனால் சபையை நடத்த முடியவில்லை. அனைவரும் அமைதியாக இருக்குமாறு அவைத் தலைவர் அன்சாரி பலமுறை கோரியும் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணி வரை சபையை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
இதேபோல லோக்சபாவிலும் அமளி வெடித்ததால் பிற்பகல் வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
பாஜக பெண்கள் போராட்டம்...
இதற்கிடையே, மகளிர் மசோதாவுக்கு இடையூறு செய்யும் எம்.பிக்களைக் கண்டித்து பாஜகவைச் சேர்ந்த பெண்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பாஜக மகிளா மோர்ச்சா சார்பில் நாடாளுமன்ற நுழைவாயில் அருகே போராட்டம் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
மகளிர் மசோதாவை உரிய முறையில் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் நாடகம் போடுவதாக பிரதமர், மத்திய அரசு, சோனியா காந்தியைக் கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்துக் கேள்விப்பட்ட ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவிக்கையில், பாருங்கள், இந்த பாஜகவினர் எம்.பிக்களை கூட உள்ளே விடாமல் அவர்கள் தடுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்படி நாளை தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின பெண்களுக்கு சீட் தருவார்கள். இந்த பாதுகாப்பு மசோதாவில் இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம் என்று கேட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications