மசோதா கிழிப்பு-அன்சாரியிடம் வருத்தம் தெரிவித்த பிரதமர்

அதே போல பிரதமர் மன்மோகன் சிங்கும் அன்சாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.
நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதையடுத்து ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
மசோதாவை கிழித்து எறிந்ததோடு அவைத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான அன்சாரியைத் தாக்கவும் முயன்றனர். இதையடுத்து அவையை அவர் ஒத்திவைத்தார்.
இதையடுத்து உறுப்பினர்களின் செயலுக்கு அமைச்சர்களும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மன்னிப்பு கோரினர்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், வெளியுறவு அணையமைச்சர் ஆனந்த் சர்மா, பிரதமர் அலுவலக அமைச்சர் பிரித்விராஜ் சவாண் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜேட்லி ஆகியோர் அன்சாரியிடம் மன்னிப்புக் கோரினர்.
மேலும் திமுக எம்பியான சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களான கரண்சிங், ராஜீவ் சுக்லா, தெலுங்கு தேசம் கட்சி எம்பி மைசூரா ரெட்டி ஆகியோரும் உறுப்பினர்களின் செயலுக்காக அன்சாரியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
கடும் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை-மீரா:
அதே போல மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்களவையிலும் சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
சமாஜவாதி எம்பி ஒருவர் மக்களவைத் தலைவர் இருக்கை அமைந்துள்ள மேடையில் ஏற முயன்றார். ஆனால், அதை அந்தக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் தலையிட்டு தடுத்துவிட்டார்.
இது குறித்து மக்களவை சபாநாயகர் மீரா குமார் வேதனை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் எந்த உறுப்பினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய அவர்,
மக்களவையை சுமுகமாக நடத்துவதற்கு அவைத் தலைவருக்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஆனால், இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவது நன்றாக இருக்காது. அந்த நடவடிக்கைகளை இதுவரை யாரும் ஒருபோதும் பயன்படுத்தியதும் இல்லை.
இது இந்திய நாடாளுமன்றம். அவையின் அனைத்து உறுப்பினர்களும் மரியாதைக்குரியவர்கள். அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை. அது நன்றாக இருக்காது என்றார் மீரா குமார்.
முலாமிடம் கும்பிட்டு கெஞ்சிய பிரணாப்:
ஒரு கட்டத்தில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் முலாயம் சிங்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முலாயம் சிங்கை கை கூப்பி கும்பிட்ட பிரணாப், அமளியை முடிவுக்கு கொண்டு வருமாறு கெஞ்சினார்.
ஆலோசித்து நிறைவேற்றலாம்- பிரதீபா:
இந் நிலையில் மகளிர் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு அனைத்துத் தரப்பினருடனும் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.
குடியரசுத் தலைவர் மாளிகையில், மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் பல்துறைப் பெண்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பெண் பத்திரிக்கையாளர்கள் பிரதீபாவிடம் பேசுகையில், ராஜ்யசபாவில் நடந்த அமளி, மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது குறித்து கேட்டனர்.
அதுகுறித்து பிரதீபா கூறுகையில், அது எனக்கு ஏமாற்றத்தைத் தரவில்லை. மசோதா நிறைவேற்றப்படும் என நான் எதிர்பார்த்திருந்தேன்.
இருப்பினும் உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு இதை நிறைவேற்றலாம் என்பது எனது எண்ணம். அதை புறக்கணிக்கத் தேவையில்லை. முடிந்த வரை விவாதித்து, ஆலோசித்து பின்னர் அதை நிறைவேற்றினால் நலமாக இருக்கும்.
இந்த மசோதாவால் அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்குத்தான் பெரும் பயன் இருக்கும் என்ற எண்ணம் உள்ளது. அதை தவறு என்று நிரூபிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
முன்பு பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்குக் கூட பெரும் எதிர்ப்புகள் வந்தன. காலப்போக்கில் அவை சரியாகி இன்று அது சிறப்பான சட்டமாக மாறியுள்ளது.
இப்போதைய பிரச்சினை, பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பதல்ல. மாறாக, பெண்கள் அரசியலுக்குள் தாராளமாக நுழைய, சுதந்திரமாக ஈடுபட அனுமதிப்பது என்பதுதான் என்றார் பாட்டீல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications