பெங்களூர் வந்த விமானத்தில் வெடிகுண்டு பீதி!
பெங்களூர்: டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலால் பெங்களூர் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இண்டிகோ பயணிகள் விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டது.
புறப்பட்ட சில மணி நேரம் கழித்து, பெங்களூர் விமான நிலைய அதிகாரிகளுக்கு டெல்லி விமான நிலைய போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து எச்சரிக்கை தகவல் வந்தது.
பெங்களூர் வந்து சேரும் விமானத்தில் வெடிகுண்டு இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்று பகல் 12.30 மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலையகத்திற்கு சம்பந்தப்பட்ட விமானம் வந்து சேர்ந்த உடனடியாக அதில் இருந்த பயணிகள் 150 பேரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பயணிகளை முழு சோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தினர். விமானத்தை தனி இடத்திற்கு கொண்டுசென்று வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் 'சல்லடை போட்டு' அலசினர்.
ஆனால், வெடிகுண்டு மற்றும் ஆபத்தான பொருட்கள் எதுவும் விமானத்தில் இல்லை என காவல்துறை இணை ஆணையர் பசவராஜ் மலகட்டி தெரிவித்தார். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications