நோபல் பரிசுத் தொகை- 10 அமைப்புகளுக்கு ஒபாமா நன்கொடை

கடந்தாண்டு அக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் ஒபாமா. அப்போதே தனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையை நன்கொடை செய்யப்போவதாக ஒபாமா அறிவித்திருந்தார்.
ஆனால், விருது அறிவித்து நான்கு மாதங்கள் ஆகியும் பரிசுத் தொகையான 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் இன்னும் ஒபாமாவின் கைக்கு வந்து சேரவில்லை என்று இரு நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஒபாமாவின் பரிசுத் தொகையில் எந்தெந்த அறக்கட்டளைகளுக்கு நிதி நன்கொடையாக வழங்கப்படும் என்ற பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 10 அமைப்புகள் கொண்ட இந்த பட்டியலில் பிஷர் ஹவுஸ் என்ற தொண்டு நிறுவனத்துக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களை ஒபாமா ஒதுக்கியுள்ளார்.
இதையடுத்து ஹைத்தி பூகம்ப நிவாரணத்துக்காக முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகியோர் உருவாக்கியுள்ள நிதிக்கு 2 லட்சம் டாலரை ஒபாமா ஒதுக்கியுள்ளார்.
மேலும், அமெரிக்கன் இந்தியன் காலேஜ் ஃபண்ட், சென்ட்ரல் ஏசியா இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications