மகளிருக்கு ராஜ்யசபாவிலும் இட ஒதுக்கீடு வேண்டும் - திருமாவளவன்

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2007-ம் ஆண்டு முதல் தமிழ்ச் சமுதாயத்துக்காக பாடுபடும் சிறந்த தலைவர்களுக்கு பொற்கிழியுடன் கூடிய விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அம்பேத்கார் பிறந்த நாளான ஏப்ரல் 14-ந் தேதி நடக்கிறது.
சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் நடைபெறும் இந்த விழாவில் அம்பேத்கார் சுடர் விருது முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வழங்கப்படுகிறது. பெரியார் ஒளி விருது கி.வீரமணிக்கும், காமராஜர் விருது கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தேவநேய பாவணருக்கும் வழங்கப்படுகிறது.
காயிதே மில்லத் பிறை விருது கவிஞர் அப்துல் ரகுமானுக்கும், அயோத்தி தாசர் ஆதவன் விருது ஞானஅலாய்சியஸுக்கும் வழங்கப்படுகிறது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை வரவேற்கிறேன். இதை கொண்டு வந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
லோக்சபாவிலும் மகளிர் மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும். உள் ஒதுக்கீட்டையும் இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றம், உள் ஆட்சி அமைப்புகளில் 50 சத வீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். அதேபோல ராஜ்யசபாவிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
புதிய, பழைய சட்டசபை கட்டிடங்களில் முதல்- அமைச்சர் கருணாநிதியின் படத்தை வைப்பதில் எந்த தவறும் இல்லை. ஜெயலலிதா தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்புகிறார். இது கண்டிக்க தக்கது.
மத்திய பட்ஜெட்டில் இலங்கை தமிழர்கள் மீட்பு- மறுவாழ்வு நடவடிக்கை குறித்து எதுவும் கூறப்படாதது வேதனை அளிக்கிறது. தலித்களுக்கு மத்தியிலும் மாநிலத்திலும் தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications