தெலுங்கானா கூட்டு நடவடிககைக் குழுவிலிருந்து தெலுங்கு தேசம் நீக்கம்
ஹைதராபாத்: தெலுங்கானா போராட்டம் தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி நீக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான முடிவு நேற்று அதன் ஒருங்கிணைப்பாளர் கோதண்டராம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், கட்சிக் கொள்கை வகுப்பாளர் ஜெயசங்கர், தெலுங்கான ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவின் கூட்டத்தில் இந்த நீக்க முடிவு எடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோதண்டராம், கூட்டு நடவடிக்கைக் குழுவின் முடிவுக்கேற்பட தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யவில்லை.
தெலுங்கானா ஆதரவு வக்கீல்கள் நடத்திய போராட்டத்தில் அவர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு தெலுங்கு தேசம் கட்சியினரே காரணம். இதை சந்திரபாபு நாயுட கண்டிக்கவில்லை. மேலும் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் தொண்டர்களும், நாயுடுவைக் கண்டித்துப் பேசவில்லை என்றார்.
தெலுங்கு தேசம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவில் தற்போது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், பாஜகவும் மட்டுமே அரசியல் கட்சிகளாக இடம் பெற்றுள்ளன.
தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கடந்த மாதமே கூட்டு நடவடிக்கைக் குழுவிலிருந்து விலகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாங்கள் கூட்டு நடவடிக்கையிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தெலுங்கானா தலைவர்கள் கூடி ஆலோசிக்கவுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications