முலாயம் விமானம் தரையிறங்கியபோது குறுக்கிட்ட சைக்கிள்- பெரும் விபத்து தவிர்ப்பு
லக்னோ: சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் விமானம் தரையிறங்கிய போது, ஓடுதளத்தின் குறுக்கே கிராமவாசி ஒருவர் சைக்கிளுடன் குறுக்கிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விமான ஓட்டி சமயோசிதமாக செயல்பட்டு விமானத்தை திருப்பி இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம், எடாவா மாவட்டத்தில் சைஃபீ கிராமத்தில் சிறிய விமானநிலையம் உள்ளது. சமாஜ்வாதி ஆட்சியில் முலாயம் முதல்வராக இருந்தபோது இது அமைக்கப்பட்டது.
இதை முலாயமும், அவரின் குடும்பத்தினரும் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். எனவே இதை இப்போதைய மாயாவதி அரசு கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில், இன்று காலை டெல்லியில் இருந்து லக்னோவுக்கு தனி விமானத்தில் சென்ற முலாயம் சிங், சைஃபீயில் இறங்கிப் பார்த்து விட்டுச் செல்ல திட்டமிட்டார்.
இன்று காலை அவரின் விமானம் தரையிறங்கி ஓடுதளத்தில் வந்துகொண்டிருந்த போது திடீரென எதிரே ஒருவர் சைக்கிளில் அவசர அவசரமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த விமான ஓட்டி சமயோசிதமாக செயல்பட்டு, விபத்து ஏற்படாமல் விமானத்தை இயக்கி நிறுத்தினார்.
இதையறிந்த முலாயம், விமானத்தில் இருந்து கடுப்புடன் வெளியே வந்தவர், 'கடவுள் தான் என்னை காப்பாற்றினார். கடவுளுக்கு நன்றி' எனக் கூறிவிட்டு,
'இது முழுக்க முழுக்க பாதுகாப்பு விதிமீறல். இந்த விதி மீறலுக்கு மாயாவதி அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஏரோடிராமில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதற்கு மாயாவதி அரசு பதில் சொல்லியாக வேண்டும்' என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications