குஜராத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி கைது
அகமதாபாத்: குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஒருவரைப் பிடித்துள்ளனர்.
உளவுத்துறை தகவலின் அடிப்படையில் நடந்த ரெய்டில் பஷீர் பாபா என்பவர் சிக்கினார். இவர் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். அகமதாபாத்தைச் சேர்ந்த என்ஜிஓ அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறுவதற்காக அகமதாபாத் வந்ததாக பஷீர் பாபா கூறியுள்ளார்.
இதுகுறித்து குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் அஜய் டோமர் கூறுகையில், என்ஜிஓ அமைப்புடன் இணைந்து மருத்துவ முகாம்கள் தொடர்பான பயிற்சிகளுக்காக வந்ததாக கூறினார் பஷீர் பாபா. ஆனால் அதற்குப் பதில், சந்தேகத்திற்கிடமான வகையில் அவர் செயல்பட்டு வந்தார்.
பல்வேறு நபர்களை அவர் சந்தித்து புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். போனிலேயே தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இமெயில்களையும் பெருமளவில் அனுப்பி வந்துள்ளார் என்றார்.
இவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தில் உஷார் நிலையில் இருக்குமாறு அவை அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நேற்று காலைதான் மும்பையில் ஓஎன்ஜிசி உள்ளிட்ட முக்கிய நிலைகளைத் தகர்க்கும் நோக்கில் வந்த 2 பேரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பிடித்தனர் என்பது குறிப்பிடத்த்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications