கொள்ளையனை பிடிக்கச்சென்ற போலீஸ் படை மீது பெண்கள் தாக்குதல்
குன்டக்கல்: கொள்ளையனை பிடிக்கச் சென்ற போலீசாரை பெண்கள் கூட்டமாக வந்து முற்றுகையிட்டு தாக்கிய சம்பவம் ஆந்திர மாநிலம் குன்டக்கல்லில் நடந்தது.
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குன்டக்கல்லைச் சேர்ந்தவன் உசேன். பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு தேடப்படுபவன்.
இவன் சில நாட்களுக்கு முன்பு விஜயவாடா காந்தி பார்க் அருகே உள்ள நகைக்கடையில் புகுந்து 850 கிராம் நகை, ரூ.34ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றான்.
இவன் மீது விஜயவாடா ஒன் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். உசேன் குன்டக்கல்லில் பதுங்கி இருப்பதாக விஜயவாடா போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து 10பேர் கொண்ட தனிப்படை போலீசார் குன்டக்கல் சென்றனர். உசேன் பதுங்கி இருக்கும் வீட்டை சுற்றி வளைத்தனர்.
இதையறிந்ததும் அந்த ஊரை சேர்ந்த பெண்கள் அங்கு மண்எண்ணெய் கேன், கத்தி, அரிவாளுடன் கும்பலாக திரண்டனர்.
திடீரென 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது பெண்கள் திடீரென போலீசார் மீது மண்எண்ணெய் ஊற்றினார்கள்.
எங்க ஊருக்குள் யாரையும் கைது செய்ய விடமாட்டோம் என்று கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் ஏட்டு சுந்தரம் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசாரை கண்டதும் பெண்கள் தப்பி ஓடினர்.
போலீசார், ஏட்டு சுந்தரம் உள்ளிட்ட 10 பேரையும் அங்குள்ள அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சுந்தரம் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications