காங் கோஷ்டி மோதல் - ஜிகேவாசன் ஆதரவாளர் அலுவலகம் சூறை
சென்னை: இளைஞர் காங்கிரஸ் தேர்தலை ஒட்டி ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சென்னையில் ஜி.கே.வாசன் ஆதரவாளரின் அலுவலகம் இன்று சூறையாடப்பட்டது.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் தேசிய அளவில் நடந்து வருகின்றன. வட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் தேர்தல்கள் நடந்து முடிந்தன.
தமிழகத்தில் முதல் கட்டமாக உள்ளாட்சி அமைப்பு ரீதியில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதற்காக தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உறுப்பினர் அடையாள அட்டை உள்ளவர்கள் வாக்குச் சீட்டில் முத்திரையிட்டு ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.
முன்னதாக இந்த தேர்தலின் போது குமரி மாவட்டம் உள்பட சில பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் 2வது கட்ட தேர்தல் இளைஞர் காங்கிரஸ் சட்ட மன்ற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நடைபெறவுள்ளது.
வரும் 19ம் தேதி இத்தேர்தல் தொடங்குகிறது. 30ம் தேதிக்குள் இந்த தேர்தல் நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் 10ம் தேதி மாநில அளவிலான இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு லட்சத்து ஆயிரம் பேர் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், சென்னையில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் காரணமாக ஜி.கே.வாசன் ஆதரவாளர் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.
அமைந்தகரை பகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு மோதல் ஏற்பட்டுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் கதிரவன் அலுவலகம் இன்று அதிகாலை 3 மணிக்கு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
இன்று காலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அலுவலகத்தை தாக்கி விட்டு தப்பிவிட்டதாக, அமைந்தகரை காவல்நிலையத்தில் கதிரவன் புகார் அளித்துள்ளார். தாக்குதல் நடத்தியது மாநில தலைவர் தங்கபாலு கோஷ்டியினர் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடும் தன்னை மிரட்டும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கதிரவன் தெரிவித்திருக்கிறார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications