நித்தியானந்தா செக்ஸ் காட்சி வீடியோவை ஒளிபரப்ப தடை கோரிய மனு தள்ளுபடி
சென்னை: சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் இடம் பெற்றிருந்த வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப தடை விதிக்கக் கோரியும், அதை காட்டிய மீடியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளை சன் டிவி, நக்கீரன் ஆகியவை முதன் முதலில் ஒளிபரப்பின. பின்னர் பல்வேறு பத்திரிகைககள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், நித்தியானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா இருக்கும் படுக்கையறை காட்சிகளை நக்கீரன் உட்பட 26 மீடியாக்கள் வெளியிட்டுள்ளன.
இதனால் பள்ளிக்குழந்தைகள் மனது கெட்டுப்போகிறது. அந்த 26 மீடியாக்களும் செய்தது ஒழுங்கு முறை சட்டத்திற்கு எதிரானது. அதனால் இந்த ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிரு்நதார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், நித்தியானந்தா விவகாரம் தொடர்பாக அவரே வேண்டுமானால் வழக்கு தொடராலம். அவர் பெரும்புள்ளியாக இருக்கிறார். அவர் வழக்கு தொடர்வதில் நியாயம் இருக்கும்.
ஆனால் நீங்கள் வழக்கு தொடர்வது தேவையற்றது. அவருக்கு ஆதரவாக செயல்படுவது போலிருக்கிறது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யப்படுவதாக கூறி வழக்கை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications