டிவி சீரியல் கதாசிரியருக்கு கத்திக் குத்து!
சாலையி்ல் மனைவியோடு நடந்து சென்று கொண்டிருந்த டிவி சீரியல் கதை வசனகர்த்தா வடிவேல் முருகனை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.
சென்னை கே.கே.நகரில் வசித்து வரும் வடிவேல் முருகன் (38 டி.வி. தொடர்களுக்கு கதை-வசனம் எழுதி வருகிறார்.
நேற்றிரவு இவர் தனது மனைவி நிர்மலாவுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மனைவி நிர்மலாவின் தோளில் கைபோட்டபடி வடிவேல் முருகன் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
கே.கே.நகர் அழகிரி சாலை சந்திப்பில் அவர்கள் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென இவர்கள் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
"நடுரோட்டில் ஒரு பெண்ணின் தோளில் கை போட்டபடி எப்படி நடந்து செல்லலாம்... மனைவியாகவே இருந்தாலும் நடு ரோட்டிலா இதையெல்லாம் செய்வது?" என கேட்டு, வடிவேல் முருகனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந் நிலையில் அந்த இளைஞர், வடிவேல் முருகனின் கழுத்திலும், வயிற்றிலும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
பக்கத்திலிருந்த நிர்மலா அலறினார். வடிவேல் முருகன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த இளைஞரை தேடி வருகிறார்கள்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications