துங்கபத்ரா அணையில் நீர்கசிவு-உடையும் ஆபத்தில் இருப்பதாக தகவல்!
ஹைதராபாத்: துங்கபத்ரா அணையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அணை எந்த நேரத்திலும் உடையும் அபாயத்தில் உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் மிகப்பெரிய அணைகளுள் ஒன்று துங்கபத்ரா அணை. ஹைராபாத் அருகே உள்ள இந்த அணையின் பராமரிப்புக்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது.
இந்நிலையில் அணையில் நீர் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அணை பலமிழந்து எந்த நேரத்திலும் உடையும் அபாயத்தில் இருக்கிறது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அணைக்காக ஒதுக்கப்பபட்ட நிதியை எம்எல்ஏக்களும், உயரதிகாரிகளும், பொறியாளர்களும் மோசடி செய்து, அணையை பராமரிக்காமல் விட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
அணையின் பாதுகாப்பு குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவும், நிதி மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications