தகுதியில்லாதவர்களுக்கு பதவி உயர்வு-மின்வாரியம் மீது வழக்கு
நாமக்கல்: தமிழ்நாடு மின் வாரியத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு பதவி உயர்வு வழங்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த குருசாமி உள்பட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாங்கள் கடந்த 1991ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தோம். 2005ம் ஆண்டு உதவியாளராக பதவி உயர்வு பெற்றோம்.
அதன் பின்பு அஞ்சல் வழியில் பி.காம் பட்டம் படித்தோம். எங்களைப் போன்ற கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு அக்கவுன்ட் மேற்பார்வையாளர் பதவி வழங்காமல் உரிய கல்வித் தகுதி இல்லாத 350 பேருக்கு அந்தப் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
கல்வித்தகுதி உள்ளவர்களுக்கே பதவி உயர்வு வழங்க வேண்டும் என கடந்த 2006ம் ஆண்டு இது போன்ற ஒரு வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கல்வித் தகுதி இல்லாதவர்களுக்கு பதவி உயர்வு வழங்க மின்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே, மின்துறையின் இந்த செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
இம்மனு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு மின்வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications