பென்னாகரத்தில் 24ம் தேதி கருணாநிதி தலைமையில் திமுக கூட்டணி பிரசாரக் கூட்டம்
பென்னாகரம்: பென்னாகரத்தில் வருகிற 24ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.
பென்னாகரத்தில் வருகிற 27ம் தேதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் 25ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்பசேகரனுக்கு ஆதரவாக திமுக முன்னணியில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தற்போதைய திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் முதல் முறையாக முதல்வர் கருணாநிதி இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
வருகிற 24ம் தேதி அவர் கலந்து கொள்ளும் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
மாலை பென்னாகரம் அண்ணா திடலில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.
காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அப்துல்ரகுமான் எம்.பி., புரட்சி பாரதம் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி, விவசாயிகள்-தொழிலாளர் கட்சி பொன்.குமார், தமிழ் மாநில தேசிய லீக் திருப்பூர் அல்தாப், அருந்ததியர் மக்கள் கட்சி வலசை ரவிச்சந்திரன், பு.தா.இளங்கோவன் ஆகியோர் பேசுகிறார்கள்.
இதற்காக 24-ம் தேதி காலை வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையிலிருந்து மொரப்பூர் செல்கிறார் கருணாநிதி. அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் இண்டூர் அருகே உள்ள ஒரு விருந்தினர் மாளிகைக்குச் சென்று ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் மாலை பொதுக்கூட்டத்திற்கு சென்று கலந்து கொண்டு பேசுகிறார்.
கூட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications