பால் உற்பத்தியாளர் போராட்டம் தேவையற்றது: அமைச்சர் மதிவாணன்

Subscribe to Oneindia Tamil

சேலம்: பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டி போராட்ட அறிவிப்பு செய்துள்ளது தேவையற்றது என தமிழக பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் கூறினார்.

சேலம், ஆவின் பால் பண்ணையில் திடீர் சோதனை நடத்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் வருகை தந்தார்.

அப்போது தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

'தமிழகத்தில் 26 லட்சம் லிட்டர் பால், ஆவின் மூலம் கொள்முதல் செய்து, பதப்படுத்தி நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் மட்டும் 10 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதே போன்று, சேலம் மாவட்டத்தில் தினமும் நான்கு லட்சத்து 46 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில், இரண்டு லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

உள்ளூர் தேவைக்காக ஒரு லட்சத்து 52 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. உபரியாக உள்ள 5,000 லிட்டர் பால் பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

திமுக ஆட்சியில் தான் ஆண்டுக்கு ஒரு முறை பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுகிறது. பசும்பால் லிட்டருக்கு 5.50 ரூபாய், எருமை பால் லிட்டருக்கு 10 ரூபாய் என கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை, சேலம் ஆவின் பால்பண்ணை வெவ்வேறு துறை சார்ந்தது இல்லை என்பதால், அனைத்தும் ஒரே துறையின் கீழ் இயங்கி வருகிறது.

பொது மக்களிடம் பால் பொருட்கள் லாபத்துக்கு விற்பனை செய்வதால், இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டி போராட்ட அறிவிப்பு செய்துள்ளது தேவையற்றது. கடந்த ஆறு மாதத்துக்கு முன் தான் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது.

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் குறித்து, ஐகோர்ட் உத்தரவும், அரசின் கொள்கை முடிவை பொறுத்தே நடைபெறும்.

தொகுப்பூதிய அடிப்படையில் வேலை செய்து வருபவர்கள், பணி நிரந்தரம் செய்வதில் சிக்கல் உள்ளது. இவர்கள் நேரடியாக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணியில் சேரவில்லை என்பதால், இவர்களை நிரந்தரம் செய்யவதில் சிக்கல் உள்ளது.

இருப்பினும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+