மத்திய பிரதேசம்-போர்வெல் குழியில் விழுந்த சிறுவன் பலி
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் போர்வெல் குழாயில் விழுந்த சிறுவன் பலியானான்.
ரட்லம் மாவட்டத்தில் மல்வசா எனும் கிராமத்தில் 400 அடி ஆழ போர் வெல் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த குழிக்குள் சூரஜ் என்ற 6 வயது சிறுவன் விழுந்து விட்டான். சூரஜை மீட்க போலீசார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆழ் துளை குழியை சுற்றி மண் தோண்டப்பட்டது.
குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. புதன்கிழமை இரவு வரை சிறுவன் உயிருடன் இருந்தான். போலீசாரால் சிறுவனை மீட்க முடியாமல் போகவே ராணுவம் வரவழைக்கப்பட்டது.
ஆனால் ராணுவத்தினர் வருவதற்குள் சிறுவன் பலியாகிவிட்டான். குழிக்குள் விழுந்த 56 மணி நேரத்துக்குப் பின் சிறுவனனின் உடலை ராணுவத்தினர் மீட்டனர்.












Click it and Unblock the Notifications