திண்டிவனம்-மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
திண்டிவனம் அருகே உள்ளது கீழ்மலையனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (25). இவர் இங்குள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவரும், இவரது நண்பர் ரமேஷ் (24) என்பவரும் நெல் அறுவடை செய்யும் எந்திரத்தில் தாதாபுரம் அருகே சென்று கொண்டிருந்தனர். அந்த எந்திரத்தை ரமேஷ் ஓட்டிச் சென்றார். பிரகாஷ் அவருடன் உடன் சென்றார்.
அப்போது நெல் அறுவடை இயந்திரம் உயர் அழுத்த மேல்நிலை மின்சார கம்பி மீது உரசியது.
இதில், பிரகாஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். மேலும், ரமேஷ் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications