அகதி பெண் பாலியல் பலாத்கார விவகாரம்-உண்மை கண்டறியும் குழு விசாரணை!
கரூர்: கரூர் அருகே இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பத்மாதேவி என்ற பெண்ணை போலீசார் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தலைமையில் உண்மை கணடறியும் குழு விசாரணை நடத்த உள்ளது.
கடந்த 17.05.2007ம் தேதி கரூர் காந்தி கிராமம் அருகே ஒரு வீட்டில் ராம்பிரகாஷ் என்ற சிறுவனையும், தீபிகா என்ற சிறுமியையும் மர்ம கும்பல் ஒன்று கழுத்தை அறுத்து கொடூர கொலை செய்ததது.
இந்த வழக்கில் கரூர் அருகே உள்ள ராயனூர் இலங்கை அகதி முகாம்மைச் சேர்ந்த குமார், பாண்டி, வழிப்பறி பாண்டி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இந் நிலையில், கடந்த மார்ச் 7ம் தேதி குமாரின் மனைவி பத்மாதேவியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீட்டில் விட்டனர்.
ஆனால், அன்று மாலையே பத்மாதேவி தனது வீட்டில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந் நிலையில், பத்மாதேவியை போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் தான் அவர் தீக்குளித்ததாக புகார் எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தலைமையில் உண்மை கண்டறியும் குழு நாளை இலங்கை அகதி முகாமில் விசாரனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குழுவில் தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications