கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் நிறைவேற்றம்
பெங்களூர்: கர்நாடகத்தில் பசு உள்பட மாட்டு இனங்களை கொன்றால் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் சட்ட மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகத்தில் அமலில் இருந்த பசுவதை தடுப்பு சட்டத்தை பாஜக அரசு திடீரென வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து கால்நடைகள் (மாட்டு இனங்கள்) வதைதடுப்பு மற்றும் பாதுகாப்பு' என்ற பெயரில் புதிய மசோதாவை அரசு சட்டசபையில் அறிமுகம் செய்தது.
இந்த சட்ட மசோதாவில், பசுமாடு, கன்றுகள், எருது, எருமை மாடுகள் போன்ற மாட்டு இனங்களை கொல்லக்கூடாது. இறைச்சிக்காக பயன்படுத்தக்கூடாது. இதை மீறுபவர்களுக்கு குறைந்த பட்சம் 1 ஆண்டு முதல் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். சிறைத் தண்டனை மற்றும் அபராதம் தனித் தனியாகவோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். 2வது தடவை குற்றம் செய்தால் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
எதிர்க் கட்சி காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பேசுகையில், இந்த சட்டம் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது என்றார். எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையிலும் இந்த சட்ட மசோதா குரல் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. ஆளும் பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் இந்த சட்ட மசோதா நிறைவேறியது.
பின்னர் வெளியே வந்த சித்தராமையா கூறுகையில், எந்த ஒரு மாநிலத்திலும் இதுபோன்ற கடுமையான சட்டம் இல்லை. மாட்டு இனங்களை இறைச்சிக்காக பயன்படுத்துவதற்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது கற்பழிப்பு குற்றத்துக்கு இணையான தண்டனை. இதை எதிர்த்து நாங்கள் கவர்னரிடம் முறையிடுவோம் என்றார்.
சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா:
முன்னதாக சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதாவும் கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மீது பேசிய சித்தராமையா, சமஸ்கிருதம் மற்றும் வேத பல்கலைக்கழகத்தை கர்நாடகத்தில் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பாஜகவி்ன் கொள்கைகளைப் பரப்பும் மறைமுக திட்டமாகும் என்றார்.
எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பையடுத்து சமஸ்கிருதம் மற்றும் வேத பல்கலைக்கழகம் என்பதில் 'வேதம்' என்ற வார்த்தையை நீக்க அரசு சம்மதம் தெரிவித்தது. ஆனாலும் இந்த சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து இந்த மசோதா நிறைவேறியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications