தொழில் துறைக்காக 4,000 ஏக்கர் 'நில வங்கி' - மேற்குவங்க அரசு ஏற்பாடு!
கொல்கத்தா: நிலம் கையகப்படுத்தல் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்க தொழில் துறைக்கென்று பிரத்தியேகமாக சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் அடங்கிய 'நில வங்கி' (Land Bank) ஒன்றை மேற்குவங்க அரசு முன்கூட்டியே தயார்படுத்தி வைத்துள்ளது.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தொழில் துறையினர் மத்தியில் இத்தகவலை முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்தார். ,
மேலும் அவர் கூறுகையில், "'தொழில் நடவடிக்கைகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்புகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் இப்பிரச்னைகளை அரசியலாக்கி குளிர்காய்கின்றன.
எனவே தொழில் துறைக்கு என பிரத்தியேகமாக 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு தயார்படுத்தி உள்ளது. இதனை நில வங்கி என்ற திட்டத்தின் கீழ் கையகப்படுத்தியுள்ளோம். துர்காப்பூர், அசான்சால், பான்குரா, புரூலியா ஆகிய இடங்களில் இந்த நிலம் உள்ளன.
இவற்றை அரசு கையகப்படுத்தும் போதும் சிறு சிறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் முந்தைய பிரச்னைகளை விட இவை சமாளிக்கக் கூடிய அளவே உள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை விவசாய சாகுபடிக்கு தகுதியற்றவை என்பதாலும் பிரச்னை ஓரளவு குறைந்தது.
நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்குவது, அந்தந்த சூழலைப் பொறுத்து அமையும். நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பணி வாய்ப்பு கட்டாயமாக வழங்கப்படும்.
இனி தொழிற்சாலைகளுக்கு நிலம் தேவைப்படுவோர் இந்த வங்கி மூலம் நிலங்களைப் பெற்றுக் கொள்ளலாம்...' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications