தென் கொரிய ஆண்களை மணக்க கம்போடிய பெண்களுக்குத் தடை
நோம் பென்: கம்போடியப் பெண்கள் தென் கொரிய ஆண்களை திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்போடிய அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.
திருமணம் என்ற பெயரில் தென் கொரியாவுக்கு கம்போடியப் பெண்கள் விற்கப்படுவதாகக் கூறி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் கம்போடியாவைச் சேர்ந்த 25 பெண்களை விலைக்கு வாங்கி தென் கொரியாவுக்கு அனுப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். இதன் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.
கம்போடியாவில் சீனாவின் உதவியோடு மாபெரும் இனப் படுகொலையை அந் நாட்டு அரசு நடத்தியது. இந்த நாட்டின் தென் கொரியாவும் வட கொரியாவும் நடத்திய மறைமுகப் போரில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரில் வட கொரியாவை சீனா ஆதரித்தது.
ஆனாலும் இனப் போருக்குப் பின் கம்போடியா- தென் கொரியா இடையே உறவு வலுவடைந்தது. கம்போடியாவி்ல் தென் கொரியா ஏராளமான முதலீடுகளைச் செய்துள்ளது.
மிக ஏழ்மையான நாடான கம்போடிய மக்களிடையே தென் கொரியாவில் குடியேற பெரும் ஆர்வம் இருந்து வருகிறது. தென் கொரிய ஆண்களைத் திருமணம் செய்ய கம்போடியாவில் போட்டியே நிலவுகிறது.
ஆனால், இதை இடைத் தரகர்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் கம்போடியப் பெண்களை விலைக்கு வாங்கி தென் கொரியாவில் திருமணத்துக்காக விற்பது அதிகரித்து வருகிறது. இதனால் தான் இந்தத் தடையை கம்போடியா விதித்துள்ளது.
இது இடைக்காலத் தடை தான் என்று கம்போடியா கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications
