தேவநாதன் வழக்கு: குற்றப் பத்திரிகை தயாராவதில் மகா லேட்!

காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் தேவநாதன். கோவில் கருவறையில் இவர் நடத்திய செக்ஸ் லீலைகள் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது தொடர்பாக தேவநாதன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஆனால் தற்போது தேவநாதன் மீதான வழக்கு தள்ளாடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம் குற்றவாளிகள் ஜெயிலில் இருந்து ஜாமீனில் விடுதலையாவதை தடுக்கலாம்.
ஆனால் இந்த வழக்கில் 110 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தயாரிப்பு பணி கூட தொடங்கவில்லை.
உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை காரணம் காட்டி தேவநாதன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த 3 மாதத்தில் தேவநாதனும் தனது ஸ்டைலை மாற்றிவிட்டார். பஞ்சகச்சத்தை துறந்து பேண்ட்-சட்டைக்கு மாறி விட்டார். தலைமுடியை நேர்த்தியாக வெட்டி தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்துகொண்டு கோர்ட்டில் ஆஜராகிறார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததற்கு போலீசார் தரப்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
தேவநாதனின் ஆண்மை பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. செக்ஸ் காட்சிகள் அடங்கிய லேப்- டாப் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவும் கிடைக்கவில்லை.
மேலும் தேவநாதனுடன் பழகிய 4 பெண்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையும் கிடைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்து வருகின்றனர்.
தேவநாதனையும் அவருக்கு பின்னணியில் செயல்படும் கும்பலையும் காப்பாற்றவே இந்த தாமத நாடகம் என்றும் கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications