கோக் நிறுவனத்திடம் ரூ. 216 கோடி நஷ்டஈடு கோரும் கேரளா
திருவனந்தபுரம்: பாலக்காடு மாவட்டம் பிளச்சிமடாவில் உள்ள கோகோ கோலா நிறுவன தொழிற்சாலையால் அப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட அந் நிறுவனம் ரூ. 216.26 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கேரள அரசு கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
ஆனால், இதை ஏற்க கோகோ கோலா நிறுவனம் மறுத்துள்ளது.
கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் கேரள அரசு அமைத்த 14 நபர் கமிட்டி இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது.
இந்த தொழிற்சாலையால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும், இந்த ஆலை வெளியேற்றும் திடக் கழிவால் அப் பகுதியின் சுற்றுச்சூழல் மாசுபட்டுவிட்டதாகவும் கமிட்டி கூறியுள்ளது.
இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரனிடம் கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில், இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க ஒரு நடுவர் மன்ற்ததை அமைக்க வேண்டும் என்றும் அந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை இந்த நிறுவனத்தால் விவசாயத்துறைக்கு ரூ. 84 கோடியும், நீ்ர் மாசு காரணமாக ரூ. 62 கோடியும், குடிநீர் இழப்பு ஏற்பட்ட வகையில் ரூ. 20 கோடியும், உடல் நலக் கேடு ஏற்படுத்திய வகையில் ரூ. 30 கோடியும், கூலி-ஊதிய இழப்பு என்ற வகையில் ரூ. 20 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்தக் கமிட்டி கூறியுள்ளது.
இந்த அறிக்கை குறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
அறிக்கையை நிராகரித்த கோக்:
ஆனால், இந்த அறிக்கையை இந்துஸ்தான் கோகோ கோலா நிறுவனம் நிராகரித்துள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கோக் கூறியுள்ளது.
இந்த ஆலைக்கு அனுமதி தரும்போது இந்த சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும் என்பது கேரள அரசுக்குத் தெரியாதா?.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications