போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை-தமிழக அரசு
சென்னை: போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சசரிக்கை விடுத்துள்ளது.
அழிக்கப்பட வேண்டிய காலாவதியான மருந்துகளை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை மட்டும் மாற்றி மீண்டும் கடைகளுக்கு வினியோகித்த ஏழு பேர் கைது நேற்று செய்யப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொடும் செயலில் ஈடுபட்ட கோயம்பேட்டில் உள்ள 'மீனா ஹெல்த் கேர்' எனும் மருந்து ஏஜன்சியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளும் அடக்கம்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலி மருந்துகளை கண்டுபிடிக்க மருந்து கட்டுப்பாட்டு புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் தலைமையில் ஆலோசனை...
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் போலி மருந்து விவகாரம் குறித்து இன்று அவசர ஆலோசனை நடந்தது. இதில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சுப்புராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், போலி மருந்துகள் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது.
விரைவில் இதுகுறித்து விரிவான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications