நலமுடன் இருப்பதாக பிரபாகரன், பொட்டு அம்மான் கடிதம்?

கடந்த மே மாதம் 18ம் தேதி நடந்த சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறியது, வீடியோ பசத்தையும் காட்டியது.
ஆனால், அது பிரபாகரன் போலவே உருவ அமைப்பு கொண்ட ஒருவரது உடல் என்று புலிகள் தரப்பு மறுத்தது.
இந் நிலையில் கடந்த ஜனவரி மாதம் விடுதலைப் புலிகள் தங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், பிரபாகரன் நல்ல உடல் நலத்துடன், பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். உரிய நேரத்தில் அவர் வெளியில் வருவார் என்று அறிவிப்பு வெளியிட்டது.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் குறித்து தொடக்கம் முதலே உறுதியான தகவல்கள் இல்லை.
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் என்று அவ்வப்போது தகவல்கள் பரவி வருகின்றன. இன்டர்போலும் பொட்டு அம்மானை தேடி வருவதாக இணையத் தளத்தில் அறிவித்துள்ளது. இது புலித் தலைவர்கள் அனைவரையும் கொன்று விட்டோம் என்று கூறி வரும் சிங்கள அரசுக்கு தலைவலியைக் கொடுத்துள்ளது.
இதையடுத்து பொட்டு அம்மான் குறித்து நீண்ட அமைதி காத்து வந்த இலங்கை, போரின் கடைசி நாட்களில் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் என்று சமீபத்தில் அறிவித்தது.
இந் நிலையில் நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று பிரபாகரன், பொட்டு அம்மான் பெயரில் உலகம் முழுக்க உள்ள புலி ஆதரவாளர்களுக்கு கடிதங்கள் வர ஆரம்பித்துள்ளன.
அத்தகைய ஒரு கடிதம் தமிழக அரசியல் தலைவர் உள்பட 5 பேருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை அவர்கள் தான் எழுதினார்களா அல்லது அவர்கள் பெயரில் வேறு யாராவது அனுப்பினார்களா என்பது தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications