நாடாளுமன்றத்திற்கு மட்டம் போடுவதில் அதிமுக எம்.பிக்கள் முன்னணி
டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது அதிமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள் மூன்று பேர் மிகக் குறைந்த நாட்களே கலந்து கொண்டு விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ், சுகவனம் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
நடப்பு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் மாதம் 21 நாட்கள் நடந்தது. ராஜ்யசபா 23 நாள் கூடிக் கலைந்தது.
ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கும் பல லட்சம் பணத்தை அரசு செலவிடுகிறது. அத்தனையும் மக்களின் வரிப்பணம். ஒரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஒரு மணி நேரத்திற்கு ஆகும் செலவு தோராயமாக ரூ. 14 லட்சமாகும்.
ஆனால் இந்தச் செலவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ஒரு நொடியாவது நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தில் ஒரு நாள் கூட 100 சதவீத அட்டென்ட்ஸைப் போடவில்லை நம்ம எம்.பிக்கள்.
மத்திய கொள்கை ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்த ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
குளிர்காலக் கூட்டத் தொடரில் 48 சதவீத எம்.பிக்கள் எந்த விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லையாம்.
குளிர்காலக் கூட்டத் தொடரில் மொத்தமே 106 மணி நேரங்கள்தான் உருப்படியான வேலைகள் நடந்துள்ளன. அதாவது திட்டமிட்டதை விட 76 சதவீத நேரமே பணிகள் நடந்துள்ளன. மற்ற நேரங்களில் நடந்தது எல்லாம் அமளி, துமளிகள்தான்.
லோக்சபாவில் மொத்தம் நடந்த 21 நாள் கூட்டத்தில், 6 நாட்களில் 2 மணிக்கும் குறைவான நேரமே கூட்டம் நடந்துள்ளது. மொத்தம் 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் 14 மட்டுமே நிறைவேறியது.
அதை விடக் கொடுமையான தகவல் இதுதான். நவம்பர் 26ம் தேதி விலைவாசி உயர்வு பிரச்சினை தொடர்பாக நடந்த விவாதத்தின்போது மொத்தம் 26 எம்.பிக்கள்தான் (மொத்தம் 545 பேர்) அவையில் இருந்தனர். அதிலும் சரத் பவார் தனது பதிலுரையை முடித்தபோது மேலும் ஐந்து பேர் எஸ்கேப் ஆகியிருந்தனர்.
மக்களுக்குத்தானே விலைவாசிப் பிரச்சனை எல்லாம், நமக்கெல்லாம் கிடையாது என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மாண்புமிகு உறுப்பினர்கள் நினைத்து விட்டார்களோ, என்னவோ.
ஒன்று அல்லது 2 விவாதங்களில் கலந்து கொண்ட எம்.பிக்களின் எண்ணிக்கை வெறும் 25 சதவீதம்தான். 3 சதவீதம் பேர் மட்டுமே பத்து விவாதங்களுக்கு மேல் வந்திருந்தவர்கள்.
ஒரு கேள்வி கூட கேட்காத ராகுல் காந்தி...
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ், ஜெகன் மோகன் ரெட்டி, சத்ருகன் சின்ஹா ஆகியோரெல்லாம் ஒரு கேள்வி கூட கேட்காத பெருமைக்குரியவர்களாக உள்ளனர்.
உறுப்பினர்களின் வருகைப் பதிவேட்டைப் பார்த்தால் அது படு மோசமாக இருக்கிறது. ஸ்கூல் பிள்ளைகள் பரவாயில்லை போல இவர்களுடன் ஒப்பிடுகையில்,
குளிர்காலக் கூட்டத் தொடரின் உறுப்பினர் வருகைப் பதிவு 66 சதவீதம்தான்.
15 சதவீத உறுப்பினர்கள்தான் முழு வருகைப் பதிவு வைத்துள்ளனர். 45 பேர் மட்டும்தான் 95 சதவீத அட்டென்டன்ஸ் வைத்துள்ளனர். 24 பேர் 50 சதவீத நாட்களுக்கு வந்துள்ளனர்.
தமிழக எம்.பிக்களின் நிலை...
இதில் தமிழக எம்.பிக்களின் வருகைப் பதிவு மிக மோசமாக உள்ளது. ஒரு எம்.பி கூட 50 சதவீத அட்டென்டன்ஸை வைத்திருக்கவில்லை. அதாவது பாதி நாட்களுக்கும் குறைவான நாட்களே அவர்கள் லோக்சபாவுக்குள் நுழைந்துள்ளனர்.
அதிக அளவிலான நாட்கள் லோக்சபாவுக்கு வந்தவர்கள் திமுகவைச் சேர்ந்த இளங்கோவன். இவர் 36 நாட்கள் வந்துள்ளார்.
அடுத்து, தென்காசி லிஙகம், காஞ்சிபுரம் விஸ்வநாதன், நெல்லை ராமசுப்பு ஆகியோர் 35 நாட்கள் வரை வந்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் எம்.பியான டி.ஆர்.பாலு 33 நாட்கள் லோக்சபாவுக்கு வந்துள்ளார்.
திண்டுக்கல் என்.எஸ்.வி.சித்தன், விருதுநகர் மாணிக்தாகூர் ஆகியோர் 32 நாட்கள், தேனி ஆருண், திருவண்ணாமலை வேணுகோபால் 25 நாட்கள், கோவை நடராஜன் 24 நாட்கள்
வேலூர் அப்துல் ரகுமான் 23 நாட்கள், சேலம் செம்மலை 22 நாட்கள், தாமரைச்செல்வன், ஹெலன் டேவிட்சன் 19 நாட்கள், தூத்துக்குடி ஜெயதுரை 17 நாட்கள், திருப்பூர் சிவசாமி 15 நாட்கள், திருச்சி குமார், விழுப்புரம் ஆனந்தன், நாகப்பட்டினம் விஜயன் ஆகியோர் 14 நாட்கள், முருகேசன், ஆதிசங்கர் 14 நாட்கள், பொள்ளாச்சி சுகுமார், சிதம்பரம் தொல். திருமாவளவன், திருவள்ளூர் வேணுகோபால் ஆகியோர் 13 நாட்கள் வரை லோக்சபாவுக்கு வந்துள்ளனர்.
தென்சென்னை அதிமுக எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் 4 நாட்கள், மயிலாடுதுறை அதிமுக எம்.பி. ஓ.எஸ்.மணியன் 5 நாட்கள், நாடாளுமன்ற அதிமுக கட்சித் தலைவரும் கரூர் எம்.பி.யுமான தம்பிதுரை 8 நாட்கள் மட்டுமே வந்துள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த ஜே.கே. ரித்தீ்ஷ், சுகவனம் ஆகியோர் தலா 10 நாட்கள் மட்டுமே தலையைக் காட்டியுள்ளனர்.
தமிழக எம்.பிக்கள் லோக்சபா, ராஜ்யசபா விவாதங்களில் பெரிய அளவில் கலந்து கொள்வதில்லை. கட்சிக் கட்டுப்பாடு, கூட்டணி தர்மம் என்று கதை விட்டுக் கொண்டு மக்கள் பிரச்சனைகள் குறித்து லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் வாயே திறப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நீண்ட காலமாக உள்ளது.
இதுகுறித்து அந்த எம்.பிக்களும் இதுவரை கவலைப்பட்டது போலத் தெரியவில்லை. ஆனால் தற்போது கட்டெறும்பு தேய்ந்து சித்தெறும்பு ஆன கதையாக லோக்சபாவுக்கு வருவதே பெரிய சிரமமாகி விட்டது நம் மக்கள் பிரதிநிதிகளுக்கு என்பது வேதனையைத் தருகிறது.
பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவரான குருதாஸ் தாஸ் குப்தா ஒரு நாள் கூட மட்டம் போடாமல் அனைத்து நாட்களிலும் அவைக்கு வந்துள்ளார். அதேபோல காங்கிரஸ் உறுப்பினர் ஏக்நாத் மகதியோ கெய்க்வாட், ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் ராஜீ்வ் ரஞ்சன், சிபிஎம் உறுப்பினர் ராஜேஷ் ஆகியோரும் ஒரு நாள் கூட தவறாமல் வந்துள்ளனர்.
லோக்சபாவில் மொத்தம் 440 கேள்விகள் கேட்பதற்கு வந்திருந்தன. ஆனால் கேட்கப்பட்டதோ வெறும் 131 கேள்விள்தான். இதில் 44 கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டபோது அதைக் கேட்ட எம்.பி பெருமக்கள் சபையிலேயே இல்லை.
இந்தக் கொடுமை காரணமாக நவம்பர் 30ம் தேதி கேள்வி நேரமே நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட அவலமும் நேர்ந்தது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications