Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொசு மருந்தும்.. இலவச டி.வியும்: தா.பா புகாருக்கு கருணாநிதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொசு மருந்து தெளிக்கவும், இரும்புச் சத்து மாத்திரை வழங்கம் மத்திய அரசு கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு மாநில அரசு இலவச கலர் டி.விக்களை வழங்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ள புகாருக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை:

கேள்வி:- நிதி நிலை அறிக்கை பற்றி 'தீக்கதிர்' தலையங்கம் படித்தீர்களா?

பதில்: குறைகளை மட்டும் சொல்லாமல், நிறைகளையும் பாராட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, "மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு தனித் துறை அறிவிக்கப்பட்டிருப்பது நல்ல அம்சம். இவர்களுக்காக தனித் துறை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது இங்கே நினைவுகூறத்தக்கது.

விடுதலைப் போராளிகளான ஒண்டிவீரன், தியாகி வாஞ்சிநாதன் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் யோசனையும் வரவேற்கத்தக்கதே என்றெல்லாம் தலையங்கத்தின் முன் பகுதியில் பாராட்டியிருப்பதைப் படித்தேன். குறைகளை மட்டுமே குறிப்பிடாமல் நிறைகளைப் பாராட்டியிருப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: மத்திய அரசு கொசு மருந்து தெளிக்கவும், இரும்புச் சத்து மாத்திரை வழங்கிடவும் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு மாநில அரசு இலவச கலர் டி.வி. வழங்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பென்னாகரத்தில் பேசியிருக்கிறாரே?

பதில்: இலவசத் தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கி, வழங்குவதற்காக சட்டமன்றத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளையும் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிலே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்றத் தலைவரான சிவபுண்ணியம் இடம் பெற்றிருக்கிறார். தா.பாண்டியன் அவரைத் தொடர்பு கொண்டு, மத்திய அரசு கொடுக்கின்ற பணத்தில் தான் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கி மாநில அரசு வழங்குகிறதா என்று கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. ஒரு கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்து கொண்டு மக்கள் மத்தியில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற பாணியில் பேசுவது சரியல்ல.

கேள்வி:- நிதி நிலை குறித்து திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் "முள்ளை மறைத்துக் கொண்டிருக்கும் அலங்கார மலர் போன்று உள்ளது'' என்று சொல்லியிருக்கிறாரே?.

பதில்: எப்படியோ அவரையும் அறியாமல் இந்த நிதிநிலை அறிக்கையை ரோஜா மலர் என்று உண்மையை உணர்த்த விரும்புகிறாரோ என்னவோ?

கேள்வி: நிதிநிலை அறிக்கை பற்றி தினமணி நாளிதழ் "உம்..... மோசமில்லை'' என்ற தலைப்பிலே எழுதிய தலையங்கத்தில்- "மாநில அரசு பட்ஜெட்டில் மத்திய அரசு வழங்கும் நிதி எவ்வளவு, எந்தெந்த திட்டங்களுக்கு எத்தனை கோடி என்று தனித்தனியாகப் பகுத்து அறிவிக்கவும், தமிழ்நாட்டில் கிடைக்கும் வருவாய் எவ்வளவு, அதில் செய்யப்படும் செலவு எவ்வளவு, கடன் எவ்வளவு என்பதைத் தனித்தனியாக பிரித்தும் தெரிவிக்க வேண்டுமென்று எழுதப்பட்டுள்ளதே?.

பதில்: நிதி நிலை அறிக்கை புத்தகத்தில் பக்கம் 76 முதல் 79 வரை உள்ள பக்கங்களில் "இணைப்பு'' என்ற தலைப்பில் - மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு பங்காக எவ்வளவு கிடைக்கிறது, மாநில அரசின் சொந்த வரி வருவாய் எவ்வளவு, வரி அல்லாத வருவாய் எவ்வளவு, மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் எவ்வளவு, வருவாய்க் கணக்கில் செலவுகள் எவ்வளவு என்ற தலைப்புகளின் கீழ் விவரமாக அனைத்து விவரங்களும் தரப்பட்டுள்ளன. தினமணி இதழில் தலையங்கம் எழுதியிருப்பவர் இவைகளையெல்லாம் படிக்காமல் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+