அடுத்த நிதியாண்டில் 8.5% வளர்ச்சி - மன்மோகன் சிங் நம்பிக்கை
டெல்லி: அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8.5 விழுக்காடு வளர்ச்சி அடையும் என பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து திட்டக்கமிஷன் சார்பில் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் பேசுகையில், 'நாட்டில் வறுமை ஒழிப்பு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவை மிக முக்கியமானவை.
இவற்றில் தன்னிறைவு அடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிபடுத்தியாக வேண்டும்.
வரும் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் (2012 - 2017) சராசரி ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்தை தாண்டியிருக்க வேண்டு்ம்.
2010-11ம் நிதியாண்டில் 8.5 சதவீத வளர்ச்சியை எட்டுவோம் என நம்பப்படுகிறது. இதையடுத்து 2011-12ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 சதவீத அளவை தொட்டுவிடும்.
இந்த வளர்ச்சி விகிதத்தை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். 12வது ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் இதுவாகவே அமைய வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications