கூவத்தை பார்வையிட வருகிறது சிங்கப்பூர் நிபுணர் குழு!

சென்னையில் ஓடும் கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்திலிருந்து வருகிறது. இதன் நீளம் மொத்தம் 72 கிலோ மீட்டர். கோயம்பேடு பாடிக்குப்பம் சாலையில் இருந்து இதன் சென்னை எல்லை ஆரம்பமாகிறது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிக்கு வந்ததும் இந்த ஆறு வெறும் சாக்கடையாக மாறிவிடுகிறது.
அரும்பாக்கம், அமிஞ்சிக்கரை, சேத்துப்பட்டு எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை வழியாக 17.9 கிலோ மீட்டர் தூரம் சென்னைக்குள் ஓடி கடலில் கலக்கிறது.
கூவம் ஆற்றை சுத்தப்படுத்த தமிழக அரசு ரூ.1260 கோடியில் மிகப்பெரிய திட்டம் தீட்டி செயல்படுத்த உள்ளது. இதற்காக சிங்கப்பூர் அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் சென்னையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையொட்டி சிங்கப்பூர் குழுவினர் அடுத்த வாரம் சென்னை வருகிறார்கள். கூவம் கடலில் கலக்கும் இடத்தில் இருந்து பேரம்பாக்கம் வரை 72 கிலோ மீட்டர் தூரம் கூவம் நதியை பார்வையிட்டு அறிக்கை தயாரிக்கிறார்கள். 3 கட்டமாக இதை நிறைவேற்றும் வகையில் திட்டமிடுகிறார்கள்.
கூவத்தை சுத்தப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன தொழில் நுட்பம் பயன் படுத்தப்பட வேண்டும் போன்ற அனைத்து ஆலோசனைகளையும் சிங்கப்பூர் குழு வழங்கும்.
இதற்கான அறிக்கை 2 மாதத்தில் கிடைக்கும். 10 ஆண்டுக்குள் கூவத்தை முழுவதும் சுத்தப்படுத்தி முடிக்கும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தன் காலத்திலேயே இந்த 72 கிமீ நதி முழுவதையும் சுத்தப்படுத்தி மக்கள் குளிக்கப் பயன்படுத்தும் அளவு தெளிவான நதியாக மாற்றப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications