சென்னை ராணுவ குடோனில் தீ - பொருட்கள் நாசம்
சென்னை: சென்னையில் உள்ள ராணுவ குடோனில் நேற்றிரம் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் ஏராளமான பொருட்கள் நாசமாயின.
சென்னை கோட்டையில் உள்ள பழைய தலைமைச்செயலக வளாகத்தில் ராணுவ குடோன் உள்ளது. இங்கிருந்து தமிழகம் முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களுக்கும் வீட்டு உபயோக பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
இந்த குடோனில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்தவுடன், சென்னை உயர்நீதிமன்றம், திருவல்லிக்கேணி, தலைமைச்செயலகம் ஆகிய பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.
ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் 150 புதிய பிளாஸ்டிக் நாற்காலிகள், சோப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தீ விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று தமிழ்நாடு தீயணைப்பு துறை துணை இயக்குனர் விஜயசேகர் தெரிவித்தார்.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications