கிரிக்கெட் வாரிய பொருளாளராக சீனிவாசன் பதவி வகித்தது செல்லும்- உயர்நீதிமன்றம்
சென்னை: இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் பதவியில் சீனிவாசன் இருந்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஆண்டு இது தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சீனிவாசன் வாரிய பொருளாளராக இருந்து வந்தார். தற்போது அவர் செயலாளராக பதவி வகிக்கிறார்.
அந்த மனுவில்,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளராக என்.சீனிவாசன் பதவி வகிக்கிறார். இவர் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஐ.பி.எல். கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதன் மூலம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு மாறாக அவர் செயல்படுகிறார். வாரியத்தின் பதவியில் இருக்கும் ஒருவர் எந்த ஒரு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே, அவர் பொருளாளராக பதவி வகிப்பது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
2008ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும்போது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வர்த்தக நோக்க விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது முழுக்க முழுக்க சீனிவாசனுக்காக கொண்டுவரப்பட்ட திருத்தம் ஆகும். எனவே, அதையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி, முத்தையா மனுவைத் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து முத்தையா அப்பீல் செய்தார்.
இதை நீதிபதிகள் முருகேசன், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது சீனிவாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன் வாதிடுகையில், ஐ.பி.எல். மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டியாகும். அதற்கான விதிகளில், ஒருவரின் லாபத்திற்காக திருத்தங்கள் கொண்டுவரப்படவில்லை.
அந்த விளையாட்டு போட்டிகளில் வர்த்தக நோக்கத்திற்காகவும், அந்த விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காகவும்தான் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
எந்தவிதிகளையும் மீறி சீனிவாசன் பதவி வகிக்கவில்லை. எனவே, அவரது பொருளாளர் பதவியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள் முத்தையாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications