பென்னாகரம்: இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது- கருத்துக் கணிப்புகள் வெளியிட தடை

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், திமுகவின் இன்பசேகரன், பாமகவின் தமிழ்க்குமரன், அதிமுகவின் அன்பழகன், தேமுதிகவின் காவேரி வர்மன் உள்பட மொத்தம் 31 பேர் போட்டியிடுகிறார்கள்.
இடைத் தேர்தலுக்கான பிரசாரம் படு தீவிரமாக நடந்து வந்தது. திமுக சார்பில் முதல்வர் கருணாநிதி நேற்று பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பிரசாரம் செய்துள்ளனர்.
அதிமுகவுக்காக அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். முன்னாள் அதிமுக அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டு பிரசாரத்தைக் கவனித்தனர்.
பாமக சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருகின்றனர். மணியின் மகன்தான் பாமக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக சார்பில் கட்சித் தலைவர் விஜயகாந்த் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று திமுகவின் இறுதிக் கட்ட பிரசாரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவுக்காக நடிகர் ராமராஜன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்கின்றனர்.
டாக்டர் ராமதாஸ் இன்று காலை பாப்பாரப்பட்டியில் பிரசாரத்தைத் தொடங்கினார். மாலையில் பென்னாகரத்தில் முடித்தார்.
இதேபோல விஜயகாந்த்தும் இன்று இறுதிக் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். மாலை 5 மணிக்கு இண்டூரில் பிரசாரத்தை முடித்தார்.
கருத்துக் கணிப்புகளுக்கு தடை...
இதற்கிடையே தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
அதாவது 25ம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி, இண்டர்நெட், ரேடியோ, இண்டர்நெட் டிவி, கேபிள் டிவி, செல்போன் அல்லது பத்திரிகைகள், செய்தித்தாள், போஸ்டர், விளம்பர தட்டி, துண்டுப் பிரசுரங்கள் உள்பட எந்த வகையிலும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது.
மார்ச் 25ம் தேதிக்கு முன்பு, கருத்துக் கணிப்புகளை வெளியிடுவோர், அந்த கருத்துக் கணிப்பு எத்தனை பேரிடம் நடத்தப்பட்டது, கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பற்றிய விவரம், போன்றவற்றையும் தெரிவிக்க வேண்டும். அதில் தவறு ஏற்படுவதற்கு எத்தனை சதவீத வாய்ப்பு உள்ளது. ஆய்வு மேற்கொண்டவர்கள் யார் என்பது பற்றியும் தெரிவிக்க வேண்டும்.
இதுபோல், தேர்தல் நடைபெறும் நாளன்று ஓட்டு போட்டுவிட்டு வருவோரிடம் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை கருத்துக் கணிப்பு நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதை யாராவது மீறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications