புலிகளின் நினைவு சின்னங்களை அழிக்கும் இலங்கை அரசு!
வவுனியா: தமிழீழம் என்று அழைக்கப்படும் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஆட்சியில் அமைக்கப்பட்ட அனைத்து நினைவுச் சின்னங்களையும் அகற்றுவதில் குறியாக உள்ளது இலங்கை அரசு.
மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட துயிலிடங்கள், மாவீரர் நினைவுத் தூண்கள், தமிழர் அடையாளமான கலாச்சார சின்னங்கள் என ஒன்றுவிடாமல் அழித்தொழிக்கும்படி சிங்களப்படைகளுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வன்னிப் போருக்குப் பின், வட இலங்கையை சுற்றிப்பார்க்கப் போய் வந்த சில தமிழர்கள், இப்போது அந்தப் பகுதி கிட்டத்தட்ட சிங்களர் பிரதேசங்களாக, சிங்கள பெயர்ப் பலகைகளுடன் காணப்படுவதாகவும், பல இடங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் ஒன்றும் பாதியுமாக சிதைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
விடுதலைப் புலிகளின் ஆட்சியின்போது 400 பெரும் நினைவுச் சின்னங்கள், மாவீரர் துயிலிடங்களும் நிறுவப்பட்டிருந்ததாம்.
புலிகளின் முதல் கமாண்டரான சார்லஸ் அன்டனி, திலீபன் மற்றும் கிட்டு போன்றவர்களின் உருவச் சிலைகள் வடக்கிற்கு இனி அவசியமில்லை என இலங்கை அரசு அறிவித்துவிட்டே இந்த அழிப்பு வேலையில் இறங்கியுள்ளதாம்.
வன்னிப் போரில் தாய்லாந்து விமானங்கள்?:
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப் போரில் இலங்கை ராணுவத்துக்கு தாய்லாந்து விமானப் படை உதவியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கியிருப்பதாக ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
போரில் தமிழருக்கு எதிராக தாக்குதலுக்குப் பயன்பட்ட தாய்லாந்து விமானங்கள் அந்த நாட்டுக்கு மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications