இந்தியாவுடன் நாங்கள் நேரடியாக மோதவில்லை - நட்பாக இருக்க முடியும்: தலிபான்கள்
டெல்லி: இந்தியாவுடன் நாங்கள் நேரடி மோதலில் ஈடுபடவில்லை. இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உறவுகள், நெருக்கம் உள்ளது. எனவே இந்தியாவுடன் நாங்கள் நட்புடன் இருக்க முடியும், அந்த சூழலை ஏற்படுத்த முடியும் என்று தலிபான் அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஆப்கானிஸ்தானை விட்டு இந்தியா வெளியேற வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. அதேசமயம் காபூலில் நடந்த தாக்குதல்களை நாங்கள் தவறு என்றும் சொல்ல விரும்பவில்லை.
இந்தியாவுக்கும், தலிபான்களுக்கும் இடையே நட்பான சூழலை ஏற்படுத்த முடியும். நட்பாக இருக்க முடியும். இந்தியாவுடன் நாங்கள் நேரடியாக எந்த இடத்திலும் மோதியதில்லை.
அதேசமயம், ஹமீத் கர்சாயை இந்தியா ஆதரிப்பதை நாங்கள் வெறுக்கிறோம். மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.
தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தால், இந்தியா உள்பட அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணுவோம். தலிபான்களும், இந்தியாவும் இணைந்து செயல்படுவது சாத்தியமானதே.
ஆப்கானிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகள் படைகளை அனுப்பி எங்களைத் தாக்கி வருகின்றன. ஆனால் இந்தியா அப்படிச் செய்யவில்லை. ஆப்கானிஸ்தானை மறு சீரமைக்க மட்டுமே இந்தியா உதவி வருகிறது. எனவே இந்தியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வித்தியாசம் உள்ளது.
அதேசமயம், ஆப்கன் போரில் இந்தியா நடுநிலையுடன் இருக்கவில்லை. ராணுவ ரீதியாக இந்தியா ஆப்கானிஸ்தானில் செயல்படவில்லை என்றாலும் கூட ராணுவ பலத்தை வைத்து ஆப்கன் மக்களை ஒடுக்கி வரும் அமெரிக்கா தலைமையிலான படைக்கு ஆதரவாக உள்ளது. அவர்களின் ஆதரவை நாடி வரும் ஹமீத் கர்சாய் அரசை பலப்படுத்தி வருகிறது.
ஆக்கிரமிப்புப் படையினரால் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டபோது அதை இந்தியா கண்டிக்கவில்லை.
பிப்ரவரி 26ம் தேதி காபூலில் நடந்த ஹோட்டல்கள் மீதான தாக்குதலுக்கு நாங்கள் தான் பொறுப்பு. தலிபான் வீரர்கள்தான் அதைச் செய்தனர். இந்திய உளவு அமைப்பான ராவின் ஏஜென்டுகள் அங்கு கூடியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்தான் அதைச் செய்தோம்.
இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு நீண்டு நெடியது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உறவு. எனவே இந்தியாவுடன் நாங்கள் நேரடி மோதலில் ஈடுபடவில்லை. அதேசமயம், இந்தியாவின் நிலைப்பாடும் தவறானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்ர சபியுல்லா.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications