சென்னையில் பிரபல ரவுடி கழுத்து நெறித்து கொலை
சென்னை: சொத்துத் தகராறில் பிரபல ரவுடியை அவரின் சகோதரரே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஆஞ்சி கணேசன் (42); பிரபல ரவுடி. இவருக்கும் இவரது அண்ணன் வெங்கடேசனுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.
சைதை அருகில் உள்ள பேன்பேட்டை பகுதியில் இவர்களுக்கு சொந்தமான 3 வீடுகள் உள்ளன. இதனை வாடகைக்கு விட்டுள்ளனர். வாடகை பணத்தை வசூலிப்பது தொடர்பாகவும் இருவருக்கும் தகராறு இருந்தது.
இதனால் ஆஞ்சி கணேசன் சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு 3 மாதத்துக்கு முன்பு புறநகர் பகுதியான கோவிலம்பாக்கம் நன்மங்கலத்தில் குடியேறினார்.
இந்நிலையில் நேற்று மாலையில் ஆஞ்சி கணேசனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அவரது நண்பர் சுந்தர் பேசினார்.
மேடவாக்கம் வரை வந்து பணத்தை வாங்கிச் செல்லுமாறு கூறினார். இதை நம்பி, ஆஞ்சி கணேசன் கோவிலம்பாக்கம் புறப்பட்டு சென்றார்.
பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் ஆஞ்சி கணேசன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ஆஞ்சி கணேசனின் மனைவி மேடவாக்கம் போலீசில் புகார் செய்தார்.
அதில் எனது கணவரை சுந்தர் என்பவர் தான் கடத்திச் சென்றிருக்க வேண்டும். அவர்தான் கடைசியாக எனது கணவரிடம் பேசினார் என குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சைதாப்பேட்டை தாடண்ட நகரில் உள்ள குடியிருப்பு அருகே ஆஞ்சி கணேசன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சென்று பார்த்தபோது ஆஞ்சி கணேசனின் 2 கைகளும் வயரால் கட்டப்பட்டிருந்தது. அவரது கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது.
ஆஞ்சி கணேசன் அணிந்திருந்த லுங்கியை கிழித்தே அவரது கழுத்தை நெறித்து கொலையாளிகள் அவரை தீர்த்துக் கட்டியுள்ளனர்.
அவரது பின் தலை மற்றும் உடலில் லேசான காயங்கள் இருந்தன. பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஆஞ்சி கணேசனை கொன்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது அண்ணன் வெங்கடேசனே, நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு இக்கொலையை செய்தது தெரிய வந்தது.
சொத்து தகராறு காரணமாக சொந்த தம்பியையே தீர்த்துக்கட்டிய வெங்கடேசன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
அவரது நண்பர்கள் சுந்தர், சத்யா, முருகேசன் ஆகியோருக்கும் இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications