முல்லைப் பெரியாறு அணை: ஐவர் குழுவை எதிர்த்து தாக்கலான தமிழகத்தின் மனு டிஸ்மிஸ்

முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன பெஞ்ச், ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்தக் குழுவுக்கு முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைவராக இருப்பார் என்றும், மத்திய அரசு, தமிழக, கேரள மாநிலங்கள் சார்பில் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் என்றும் அது அறிவித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கனவே பலமுறை அணையின் பலம், ஸ்திரத்தன்மை குறித்து ஆராயப்பட்டு விட்டது. இந்த நிலையில் மீண்டும் ஆய்வு நடத்துவது தேவையற்றது.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தனது கடமையை தட்டிக் கழிக்கப் பார்க்கிறது. எனவே இந்த உத்தரவை கைவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதை சமீபத்தில் விசாரித்த நீதிபதி ஜெயின், இந்த ஆட்சேபனையை குழு அமைக்க உத்தரவிட்டபோதே, ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டார். பின்னர் மற்ற நீதிபதிகளிடம் கலந்து ஆலோசித்த பின்னரே உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இன்று அரசியல் சாசன பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவை ரத்து செய்ய முடியாது. அதன் விசாரணை திட்டமிட்டபடி நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும், ஆய்வுக் குழுவுக்கான செலவை தமிழக, கேரள மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று கோரி மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications