இலங்கை திரும்பிய ஈபிஆர்எல்எப் தலைவர் வரதராஜ பெருமாள்!

1990ம் ஆண்டு மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் உதவியோடும், இந்திய அமைதி காக்கும் படையின் பாதுகாப்போடும் வட-கிழக்கு மாகாண முதல்வராக நியமிக்கப்பட்டவர் வரதராஜ பெருமாள்.
இலங்கையில் தனி ஈழம் வேண்டி ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய பல குழுக்களின் தலைவர்களில் ஒருவரான இவர், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை நடத்தி வந்தார்.
ஆனால், விடுதலைப் புலிகளின் கை ஓங்கியதால் வரதராஜ பெருமாளும் அவரது ஆதரவாளர்களும் புலிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.
1989ம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை என்ற இலங்கை சென்று புலிகளை ஒடுக்க முயன்றபோது அவர்களுடன் கைகோர்த்தார் வரதராஜ பெருமாள்.
இதையடுத்து அவரை வட-கிழக்கு மாகாண முதல்வராக்கினார் ராஜிவ் காந்தி. 1988ம் ஆண்டு டிசம்பர் முதல் 1990ம் ஆண்டு மார்ச் வரை இவர் 'பொம்மை' முதல்வராக இருந்தார்.
ஆனால், 1990ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் படை நாடு திரும்பியபோது வரதராஜ பெருமாள் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
ரா-ஐ.பி பாதுகாப்புடன் இந்தியாவில் ரகசிய இடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டார். சில காலம் டெல்லியிலும் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓரிடத்திலும் பலத்த பாதுகாப்புடன் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
2000ம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்ற இவர் சந்திரிகா குமாரதுங்காவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆனால், அந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றதால் மீண்டும் தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் மீண்டும் இந்தியாவுக்கே வந்துவிட்டார்.
இப்போத விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் தனது மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் இலங்கை திரும்பியுள்ளார்.
நேற்று இந்த ரகசிய பயணத்தை அவர் மேற்கொண்டார். இலங்கையில் தமிழர் பகுதிகளில் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட வரதராஜ பெருமாள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பெருமாளின் கட்சி வரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications