கழுகுமலை அருகே வயிற்றுப்போக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
கழுகுமலை: நெல்லை மாவட்டம் கழுகுமலை அருகே வயிற்றுப் போக்குக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
கழுகுமலை அருகே அழகுநாச்சியார்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கணபதி. இவரது மனைவி காளியம்மாள். இவர்கள் இருவரும் வேலைக்காக சேரன்மகாதேவி சென்றனர். அங்கு காளியம்மாளுக்கு திடீரென வயிற்றுபோக்கு ஏற்பட்டது. தகவல் அறிந்த காளியம்மாளின் அக்கா கழுகுமலை அருகே கரடிகுளம் சின்ன காலனியை சேர்ந்த இன்னொரு காளியம்மாள் அவரை வந்து பார்த்து விட்டு சென்றார்.
கரடிகுளத்திற்கு வந்தவுடன் அவருக்கும் வாந்திபேதி ஏற்பட்டது. இதில் கடந்த 26ம் தேதி காளியம்மாள் இறந்தார். இதையறிந்த கணபதி குடும்பத்தினர் துக்க வீட்டிற்கு சின்ன காலனி சென்றனர். அங்கு அதே நாளில் கணபதியின் மகன் குருசந்திரனும் வயிற்றுப்போக்கால் இறந்தான். காளியம்மாளின் தாய் முத்தம்மாளுக்கும் வாந்தி பேதி ஏற்பட்டது. உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிக்சை பலனின்றி அவர் அங்கு இறந்தார். வயிற்றுப்போக்குக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறந்த காளியம்மாளின் மகள் கலையரசி மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு காளியம்மாள் என்பவரும் வயிற்று போக்கு ஏற்பட்டு கழுகுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்த கோவில்பட்டி சுகாதார துறை பணிகள் துணை இயக்குனர் ரால்ப் செல்வின் தலைமையில் மருத்துவ குழுவினர் மேலும் நோய் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications