120 இந்தியர்களுடன் எட்டு கப்பல்களை கடத்தினர் சோமாலிய கொள்ளையர்கள்
டெல்லி: 120 இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த எட்டு கப்பல்களை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
இதுவரை சோமாலிய கொள்ளையர்கள் நடத்திய கடத்தல் சம்பவங்களிலேயே இதுதான் மிகப் பெரியதாக கருதப்படுகிறது.
கிஸ்மாயோ கடற்கரைக்கு அருகே இந்த பயங்கர கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
அந்த கப்பல்கள் அனைத்தும் இந்தியக் கப்பல்கள் ஆகும். அனைத்தும் சோமாலியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்று கொண்டிருந்தன.
கடத்தப்பட்ட கப்பல்கலில் உள்ள அனைத்து இந்தியர்களும் குஜராத் மாநிலம் செளராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
கப்பல்களையும் அதில் இருப்பவர்களையும் விடுவிக்க எவ்வளவு பணம் தர வேண்டும் என்பது குறித்து இதுவரை கடற்கொள்ளையர்கள் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ளவும் இயலாத நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications