அதிகரித்துள்ள மி்ன்தடை - சங்கடத்தில் சங்கரன்கோவில் விசைத்தறி தொழில்!

சங்கரன்கோவிலில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக மக்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பை தரும் தொழிலாக விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகிறது. பாவு போடுதல், சாயம் முக்குதல், டப்பா போடுதல், பைண்டிங், கண்டு போடுதல், தறி இயக்குபவர்கள், பசை போடுவோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை முதல் இரவு வரை தினமும் 12 மணி நேரம் விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.150 முதல் ரூ.200 வரை கூலி கிடைக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வரும் தொடர் மின்தடையாலும், டீசல் விலை ஏற்றத்தினாலும் விசைத்தறிகளை சரிவர இயக்க முடியாத சூழ்நிலைக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக காலை 9 மணி முதல் 12 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டு வருவதால் பகல் நேரங்களில் இத்தொழிலை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால் தொழிலாளர்கலுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்தடை நேரத்தை மாற்றி அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமேன விசைத்தறி தொழிலாளர்களும், உரிமையாளர்கலும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசு மூலம் சிறு விசைத்தறிகளுக்கு மாதம் 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டும் அந்த சலுகைகளை கூட சிறு விசைத்தறி உரிமையாளர்கள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications